• Thu. Apr 18th, 2024

ஜப்பானிய தூதுவர் இலங்கைக்கு பாராட்டு!

Dec 21, 2021

​​தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்ததாக சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்று நோயின் போது இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய உதவிகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், உதவிகள் உரிய இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைந்துள்ளதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய தூதுவர் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சில் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்ததாக சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று நோயின் போது, ​​மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் இலங்கை சரியான முகாமைத்துவத்துடனும் முறையான திட்டமிடலுடனும் செயற்பட்டதாகவும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.

ஜப்பானுடன் இலங்கை நீண்டகால நட்புறவைக் கொண்டிருப்பதாகவும் இதன் ஊடாக நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஜப்பான் பெரிதும் உதவியுள்ளதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் தொற்று நோயின் போது வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், பூஸ்டர் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாகவும், ஆனால் நோயிலிருந்து விடுபட வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் இருப்பதாக அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.