• Tue. Sep 10th, 2024

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்கவில்லை ; சர்வதேசத்திற்குச் கொண்டுசெல்ல தீர்மானம்

Jan 24, 2022

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாவும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும் அவர் கூறினார்.

எனவே சர்வதேசத்திற்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அதற்கும் அர்த்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளையும் தாம் அணுகவுள்ளதாக கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

இவ்வளவு நாட்களாக உள்நாட்டில் நீதி கிடைக்கும் என நமபியமை காரணமாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.