• Thu. Dec 5th, 2024

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்றார் மஹிந்த ராஜபக்ஷ

Dec 23, 2021

திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்ய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தாருடன் இன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருப்பதி சென்றுள்ளார்.

இதற்காக அவர் தங்கும் விடுதி, கோவில் வளாகம், அவர் செல்லும் பகுதிகள், மலைப்பாதை போன்ற பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் தங்கும் விடுதி அருகில் இருக்கும் இடங்களிலும் கண்காணிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மதியம் சென்ற அவர் நாளை காலை சுவாமி தரிசனம் செய்கிறார்.

நாளை மாலை வரை திருமலையில் தங்கும் அவர் ஐந்து மணிக்குமேல் இலங்கைக்கு புறப்பட்டு சென்றார்.