
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி விஸ்வகேது (72 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 பேர் மீன் பிடிப்பதற்காக சென்றபோது யானையைக் கண்டவுடன் மற்றவர்கள் ஓடிய நிலையில் இவர் யானைக்கு மந்திரம் செய்ய முற்பட்ட வேளை யானை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் தற்போது அவருடைய சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.