• Tue. Sep 10th, 2024

வவுனியாவில் சுகாதார விதிகளை மீறி நடைபெற்ற திருமணம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Jun 5, 2021

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்ற நிலையில் திருமண மண்டபம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் குறித்த திருமணம் நடைபெற்றது.

மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் , திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கியமைக்காக குறித்த திருமண மண்டபம் சுகாதாரப பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.