• Fri. Dec 13th, 2024

ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் செல்லும் விமானங்களுக்கு சலுகை!

Sep 28, 2021

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு நேர அட்டவணைக்கமைவான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கான சலுகைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதாவது மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சர்வதேச விமானப் போக்குவரத்துக் கம்பனிகளை குறித்த விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினத்திலிருந்து விமான நிலைய குடியகல்வு வரியை இரண்டு வருடங்களுக்கு முழுமையாக விடுவிப்பதற்கும், தொடர்ந்து வரும் 04 வருடங்களுக்கான விமானங்கள் தரையிறக்கம் மற்றும் தரிப்புக் கட்டணங்களுக்கான விலைக்கழிவுகளை வழங்குவதற்குகே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.