• Sun. Jun 13th, 2021

பிற்போடப்பட்ட நாகபூசணி அம்மனின் பெருந்திருவிழா!

Jun 8, 2021

இலங்கையில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மனின் பெருந்திருவிழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை (10.06.2021) ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இன்றைய தினம் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.