• Fri. Dec 6th, 2024

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார்

Dec 28, 2021

கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர் என தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

பதுளை-செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு ஆரோக்கியமான அபிவிருத்தியை உறுதி செய்வதே ஜனாதிபதியின் முயற்சியாகும்.
கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்ட போது அனைத்து நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டதாகவும், உலகத் தலைவர்கள் பொது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் சவாலை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விடாமுயற்சியினால் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்றும், திட்டத்தை நாசப்படுத்தவே முயன்றதாக கூறிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.