• Sat. Dec 9th, 2023

இலங்கையில் மூன்று பொருட்களின் விலை அதிகரித்தது!

Oct 14, 2021

இலங்கையில் சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாக, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்படுவதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ .150 முதல் 160 வரை உள்ளது மற்றும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தி காலம் தொடங்கியுள்ள நிலையில், வெங்காய விலை உயர்வு சாதாரணமானது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில், உச்சக்கட்டமாக 1 கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொழும்பில் ஒரு கிலோகிராம் இலங்கை உருளைக்கிழங்கின் சில்லறை விலை 130 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும், சில்லறை விலை 200 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 110 முதல் 115 ரூபாய் வரை இருந்தது. தற்போது அதன் சில்லறை விலை கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.