• Wed. Dec 4th, 2024

தனியார் மற்றும் அரச பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

Dec 29, 2021

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது 14 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பேருந்து பயண கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேருந்து கட்டண அதிகரிப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.