• Sun. Dec 8th, 2024

காணாமல்போன சிறுவர்கள் மீட்பு

Jan 6, 2022

இரத்தினபுரி, கொட்டதெனியாவ வத்தேமுல்ல பகுதியிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து காணாமற்போன 10 மற்றும் 12 வயதான சிறுவர்களான மாணவர்கள் இருவரும், மீரிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பெண்ணொருவரினால் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடம், காணாமற் போன முறைமை உள்ளிட்டவை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்தனர்.

அவ்விருவரையும் தேடி கண்டுப்பிடிப்பதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியிருந்தநிலையிலேயே அவ்விருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.