பெற்றோல், டீசல் விலை எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் 11ம் திகதியே இறுதியாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது.
எனினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஆகஸ்ட் 31ம் திகதியில் இருந்து 70 பில்லியன் டொலர் நட்டமாகி வருவதாக சுட்டிக்கட்டப்படுகிறது.
டொலர் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கூறி அரசாங்கம் விரைவில் பெரும்பாலும் அடுத்த வாரம் எரிபொருள் விலையை உயர்த்தும் என்று கூறப்படுகிறது.