ஜேவிபியின் இளைஞர் அமைப்பான, சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பினர். இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும், போராட்டக்காரர்கள் இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.