• Tue. Jun 6th, 2023

இலங்கையில் 15 மாவட்டங்களுக்கு கடும் அபாய எச்சரிக்கை

Mar 12, 2022

சப்ரகமுவ, மேற்கு, தெற்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சியின் போது சில பகுதிகளில் காற்றும் பலமானதாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.