• Thu. Oct 31st, 2024

மீண்டும் இலங்கையுடனான சேவைகளை ஆரம்பித்த சிங்கப்பூர்

Nov 16, 2021

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) இன்று கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையேயான நாளாந்த விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

வாராத்திற்கு ஐந்து விமான சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது வாரத்திற்கு ஏழாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எங்கள் உலகளாவிய வலையமைப்பை பாதுகாப்பான மற்றும் அளவீடு செய்யப்பட்ட முறையில் விரிவுபடுத்துவதைத் தொடர்ந்து கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நாளாந்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக நன்மைகளை வழங்கும்.

சிங்கப்பூரிலுள்ள எங்கள் மையத்திற்கு அப்பால் மேம்படுத்தப்பட்ட இணைப்புகளை எளிதாக்கும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸீன் இலங்கைக்கான பொது முகாமையாளரான சச்சரி லியு தெரிவித்தார்.