• Thu. Dec 5th, 2024

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் அடாவடி!

Jan 6, 2022

யாழ்.பல்கலைகழகத்திற்குள் பகிடிவதையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் பல்கலைகழகத்திற்குள் நுழைய தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேலும் குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சிங்கள சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகடி வதைக்கு உள்ளாக்கியதுடன் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.