• Tue. Sep 10th, 2024

ஆபத்தில் இலங்கை ; அழிவை நோக்கி பயணிக்கிறது!

Dec 17, 2021

ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோய் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்தத் தளர்வைச் செய்துள்ளனரா? அல்லது யாரினுடையதாவது அழுத்தங்கள் காரணமாகக் இவற்றை செய்கின்றனரா? என்ற பிரச்சனை எங்களுக்கு உள்ளது.

எவ்வாறாயினும், கொவிட் -19 தொற்றுநோய் எதிர்காலத்தில் நாட்டில் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.