• Thu. Feb 13th, 2025

மகுடத்தை இழந்தார் இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா

Feb 8, 2022

திருமதி இலங்கை அழகி பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள பட்டத்தை இன்று (08) முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தனது அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அதிகாரங்களுக்கமைய புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டத்தை, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஏப்ரல் 4 ஆம் திகதி திருமதி இலங்கை அழகியாக புஷ்பிகா டி சில்வா மகுடம் சூடினார்.

இந்நிலையில் அழகு ராணியிடம் எதிர்பார்க்கப்படும் நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை அவர் மீறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அந்தப் பெயரை தொடர்ந்து பயன்படுத்தினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்m அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.