• Sat. Sep 23rd, 2023

இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Feb 1, 2022

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

15 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,441 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 23 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 09 பேரும் மரணித்துள்ளனர் .

இதேவேளை, நாட்டில் மேலும் 1,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 612,322 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது