• Fri. Dec 6th, 2024

பதுளையில் கொல்லப்பட்ட மாணவியின் பூதவுடல் அவரது வீட்டுக்கு

Mar 10, 2022

பதுளை ஹாலி எல -உடுவர மேற்பிரிவு,1ஆம் கட்டை பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி பாடசாலை சென்று வந்த போது கோரமான முறையில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட மாணவி ஒருவரின் பூதவுடல் இன்று அன்னாரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் மாணவியின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கோரி அவர் கற்ற பாடசாலையான ஹாலிஎல வீதியில் ஊவா மாகாண ஆசிரியர் சங்கத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.