• Fri. Mar 22nd, 2024

ஒரு முட்டையின் விலை 50 ரூபா!

Feb 10, 2022

ஒரு முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவன விலை உயர்வால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை தீவன மூட்டை 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் 80 இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன், அந்த மாகாணத்தில் சுமார் 4 இலட்சம் விவசாயிகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒரு முட்டையின் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும்போது, ​​தற்போதைய சந்தை விலையில் முட்டையை விற்க முடியாமல் சுமார் 20வீத உற்பத்தியாளர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் எனவே, இப்பிரச்சினையில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், முட்டை விலை ரூ.50 ஆக உயர்வதை தொழில் துறையினர் தடுக்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.