நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, 7ஆம் தரம் கற்றுக்கொண்டிருந்த நிலையில் பாடசாலையிலிருந்து இடைவிலகியதாக கூறப்படுகின்றது.
குடும்ப வறுமை காரணமாக அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் ரிஸாட்டிற்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்துவந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றதாகவும் குறிப்பிடத்தக்கது.