• Sat. Jun 3rd, 2023

இலங்கையில் இருவரை சிலுவையில் அறைந்த விவகாரம் – 10 பேரை தேடும் பொலிஸார்

Jun 28, 2021

முகநூலில் தன்னைப் பற்றி தவறாக எழுதிய இருவரை கடத்தி சிலுவையில் அறைந்த கண்டி – பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களப் பூசாரி ஒருவர் உட்பட மேலும் மூவர் நேற்று கைதாகியிருந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களைக் கைது செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரது உதவியும் நாடப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலகொல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் வேன் ஒன்றில் கண்டி நகருக்கு அண்மித்த நகராகிய அம்பிட்டிய பிரதேசத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிலுவைப் போன்ற அடையாளத்தில் இருந்த பலகைகளில் ஆணி அடித்து அறையப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

மேலும் இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட் வேன் தற்சமயம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.