• Fri. Jan 17th, 2025

இலங்கை பல்கலைகழக மாணவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்த தயக்கம்

Oct 12, 2021

இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசியை பெறுவதில் இளைஞர்கள் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களும் தடுப்பூசி போட தயங்குவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் நேற்று முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இருப்பினும், தடுப்பூசி மையங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் வருகை எதிர்பார்த்தபடி இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தாமதமின்றி மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.