• Tue. Dec 3rd, 2024

வடமாகாண மக்களுக்கு எச்சரிக்கை

Dec 30, 2021

வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரித்துள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில், இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் 265 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமை நீடித்தால், எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் அபாய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களது வாழ்விடங்கள், பணியிடங்கள் உட்பட பொது இடங்களையும் சுத்திகரித்து, நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை அழிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.