• Sat. Mar 18th, 2023

2022ஆம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா?

Dec 31, 2021

நாட்டில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன என தெரிவித்த அவர், இந்த போகத்தில் பொதுவாக 4.3 தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கனிம உரம் பயன்படுத்தப்பட்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், அடுத்த வருடம் முதல் மனை உற்பத்தி திட்டத்தை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டுத்தோட்டத்தின் மூலம் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதே நோக்கமாகும் என்றும் விவசாய பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.