• Mon. Dec 11th, 2023

கன்றுக் குட்டியை விட உயரம் குறைந்த பசு!

Jul 8, 2021

கன்றுக் குட்டியை விடவும் மிகவும் குள்ளமான உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த பசு வங்க தேசத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேசத்தில் டாக்காவுக்கு அருகே உள்ள கிராமத்தின் பண்ணை ஒன்றில் மிகவும் உயரம் குறைவான பசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கன்றுக்குட்டியை விட உயரம் குறைவாக உள்ள இந்த பசுவின் உயரம் 51 செ.மீட்டர்தானாம். ராணி என்னும் இந்த பசுவை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசு உலகிலேயே உயரம் குறைவான பசு என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.