• Tue. Mar 21st, 2023

கனடாவிலுள்ள சுமார் 10,000 பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

Nov 18, 2021

கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் வான்கூவர் என்னும் கடற்கரை நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் காரணத்தால் மிகவும் கடுமையான மழை பெய்துள்ளது.

அவ்வாறு பெய்த மழையின் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவ லுள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை சீற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாக்கியுள்ளதாக அந்த மாவட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையே பிரிட்டிஸ் கொலம்பியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக அங்குள்ள சுமார் 10,000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.