• Thu. Dec 5th, 2024

விரைவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் அவுஸ்திரேலியா

Feb 7, 2022

அவுஸ்திரேலியாவுக்குள் சுற்றுலா பயணிகள் வர விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது,
சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுவதற்கு இன்னும் அதிக காலம் ஆகாது. இதுகுறித்து இந்த வாரமே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றாா் அவா்.

அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் முழு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக அவுஸ்ரேலியா்களும், நாட்டில் வசிப்பவா்களும் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.