பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் ஐகோர்ட்டு நீதிபதி ஆயிஷா மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதன் முதலாக பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இந்த பரிந்துரைக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆயிஷா மாலிக் சுப்ரிம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டால், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு பார் கவுன்சிலின் தலைவர் லாதிஃப் அப்ரிடி மிரட்டல் விடுத்தார்.
நீதிபதி ஆயிஷா சீனியாரிட்டி அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளதால் அவரை சுப்ரீம் கோர்ட்டுக்கு முதலில் அனுப்புவது தவறு என பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில், நீதிபதி ஆயிஷாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.