• Tue. Dec 5th, 2023

கனடாவில் பனிப்புயல் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Jan 19, 2022

கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் கராணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டொரோன்டோவில் வீசிய பனிப்புயலால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

வீதிகள் முழுவதும் பனி கொட்டிக் கிடந்ததால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், விமான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென உருவான பனிப்புயலால் வழக்கத்தை விட அதிகளவு பனி கொட்டியதாக டொரோன்டோ மேயர் தெரிவித்துள்ளார்.