கொலம்பியா நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டின் உயர் பதவிகளில் உள்ளவர்கள் பயணித்த உலங்குவானூர்த்தி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அந்நாட்டின் ஜனாதிபதி இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன் குகுட்டா நகருக்கு உலங்கு வானூர்த்தியில் சென்றுள்ளார்.
அப்போது போதை பொருள் தயாரிப்புக்கு பேர் பெற்ற அந்நாட்டின் கட்டடும்போ மாகாணம் வழியாகப் பறந்த போது ஹெலிகாப்டர் மீது சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், இந்த தாக்குதலை இ.எல்.என் போராளிகள் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.