• Thu. Oct 31st, 2024

புர்கா அணிந்து தாலிபான்களை அதிர்ச்சியடைய வைத்த கமாண்டோக்கள்; வெளியான தகவல்

Sep 7, 2021

தாலிபான்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப, அவர்களுக்கு தண்ணிகாட்டி பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திக தி ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி அமெரிக்கப் படைகளும் வெளியேறினார்கள்.

இதையடுத்து நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் விமான நிலையத்திலிருந்த அமெரிக்க விமானங்கள், ராணுவத் தளவாடங்களை தாலிபான்கள் சேதப்படுத்தி இருந்தனர்.

இது ஒருபுறம் இருக்கத் தாலிபான்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப, பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து துணிச்சலாக ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஆப்கான் பெண்கள், குடியிருப்பை விட்டு வெளியே செல்லும் போது உடல் முழுவதும் மறைக்க புர்கா அணிந்து செல்வது வழக்கம்.

இந்த திட்டத்தைக் கையில் எடுத்த பிரித்தானிய கமாண்டோக்கள் புர்கா அணிந்து பல கி.மீ தொலைவு பயணித்துள்ளனர்.

ஆப்கான் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்பட்ட பிரிட்டிஷ் SAS கமாண்டோக்கள் இறுதிக் கட்டத்தில் தாலிபான்கள் கண்ணிலிருந்து தப்ப, இந்த விசித்திர முடிவை எடுத்துள்ளனர்.

அதன்படி 20 பேர்கள் கொண்ட SAS கமாண்டோக்கள் வாடகை வாகனத்தில் காபூல் விமான நிலையம் சென்றுள்ளனர்.

20 SAS கமாண்டோக்களும் புர்கா அணிந்திருந்ததுடன், வாடகை வாகனத்தில் தாலிபான்களுக்கான கொடியையும் கட்டியிருந்தார்கள்.

இதன்போது அவர்கள் காபூல் விமான நிலையம் சென்று சேரும் வரையில் தாலிபான்களின் பல சோதனைச்சாவடிகளை கடந்துள்ளனர்.

SAS கமாண்டோக்கள் தங்களுக்கான பாதுகாப்பு ஆயுதங்கள் தவிர்த்து, மற்ற ராணுவ கருவிகளையும் கைவிட்டு, காபூல் விமான நிலையம் நோக்கிப் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாலிபான்கள் கண்ணில் மண்ணை தூவி SAS கமாண்டோக்கள் விமான நிலையம் சென்ற தகவல் தாலிபான்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.