• Fri. Apr 19th, 2024

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; 40 லட்சம் பேரை முடக்கிய சீனா

Oct 26, 2021

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 40 லட்சம் பேரை மக்கள் கொண்ட சீனாவின் லான்ஜோ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
அங்கிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
எனினும், வைரஸ் பரவல் பல நாடுகளில் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது.

குறிப்பாக, சீனாவில் கொரோனா பாதிப்பு தற்போது மெல்ல வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிலும், 40 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட லான்ஜோ நகரில் புதிதாக 6 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள லான்ஜோ நகருக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் 40 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட லான்ஜோ நகர மக்கள் அவரச தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.