• Sun. Jul 21st, 2024

மீண்டும் ஆப்கானில் கொடூர தண்டனைகள்!

Sep 24, 2021

ஆப்கானில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிற்கு மரணதண்டனை அவயங்களை துண்டித்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படவுள்ளதாக தலிபானின் மத பொலிஸின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

கைகால்களை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானவை என அவர் அசோசியேட்டட் பிரசிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னரை போல பொதுமக்கள் மத்தியில் இந்த தண்டனைகளை நிறைவேற்றப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் தண்டனைகளை நிறைவேற்றுவது குறித்த கரிசனைகளை அவர் நிராகரித்துள்ளார்.

எங்கள் சட்டங்கள் எவ்வாறானதாக காணப்படவேண்டும் என்பதை எவரும் எங்களிற்கு தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

1990களில் இசை பாடல்கள் போன்றவற்றை கேட்டவர்கள் ஒழுங்காக தாடி வைத்துக்காள்ளாதவர்கள் போன்றவர்களிற்கு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்திய துராபி கடுமையான தண்டனைகள் தொடரும் எனினும் தனது அமைப்பு கையடக்க தொலைபேசி தொலைக்காட்சி படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை அனுமதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தனது கடந்த கால நடவடிக்கைகளிற்காக ஐநாவின் தடைப்பட்டியலில் உள்ள அவர் பகிரங்கமாக தண்டனை வழங்கவேண்டுமா என்பது குறித்து தலிபானின் அமைச்சரவை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

1990களில் காபுலின் விளையாட்டு மைதானத்தில் பகிரங்கமாக தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன அல்லது எய்ட் கா மசூதியின் முன்பாக நிறைவேற்றப்பட்டன.

ஆட்சிக்கு வந்தது முதல் தலிபான் முன்னர் போன்று கடுமையான விதத்தில் ஆட்சி புரியப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

எனினும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.