நம் எழும் உணர்ச்சிகளை நாகரிகம் பண்பாடு அற்ற தொடக்க காலத்தில் ஓசையாகவும் ஒலியாகவும் உடல் அசைவாகவும் கை அசைவாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள் காலப்போக்கில் நடனமாக வளர்ந்தன. தமிழ்மொழியை முத்தமிழ் என்று தொன்றுதொட்டு வருவதைப் பார்க்கிறோம். முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம் எனும் மூன்றாகும். பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை கூத்து என்றும் அழைத்தனர்.
சைவசமய முழுமுதற்கடவுளான சிவனை நடராஜர் வடிவத்தில் சித்திரிக்கப்படுவதை பார்க்கலாம். “தாண்டவம்” என்பது மகிழ்ச்சியின் உச்சம் என்பார்கள் அவ்வாறான மகிழ்ச்சியின் உச்சத்தில் அழகே உருவான பெண்மணிகள் காட்சி தந்திருந்தார்கள்.
ஐரோப்பாக் கண்டத்தின் இங்கிலாந்தின் தலைநகரமான இலண்டன் ஈலிங் பகுதியில் மென்மொழி அம்மையாகிய ஈலிங் கனகதுர்காவின் ஆலயத்தில் குமரிக்கண்டத்தில் எடுத்த எம் தாய்மொழியை இலண்டன் பல்கலைக்கழகத்தி்ல் (SOAS)மீட்டு உருவாக்கும் பணியில் ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையினர் (TamilStudiesUK) பாரம்பரிய நாட்டிய நிகழ்வான ’நடனமாலை 2022′
மிகவும் சிறப்பாக நெறிப்படுத்திய பெருமைக்குரிய ஸ்ரீ மதி சுஜாதா சதீஷ் அவர்கள் வடிவமைத்து தந்துள்ளார்.
பரத நாட்டியக்கலை புலம்பெயர் தேசத்தில் நமது எதிர்கால சந்தியினரிடம் தெய்வ பொலிவுற வைத்த பெருமைக்குரியவராக ஸ்ரீமதி சுஜாதா சதீஷ் அவர்கள், இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழ் அம்மையாரான எமது கரோ நகரசபையின் துணை மேயர் திருமதி சசிகலா சுரேஷ் அவர்களின் வாழ்த்துரை தமிழ்மொழி அவசியம் பற்றியும் எம் குழந்தைகளையும் வாழ்த்தியிருந்தார்.
மேலும் பாரளுமன்ற உறுப்பினர்( ஈலிங் சவுத்தோள் ) திரு விரேந்திரா சர்மா அவர்களும் ஈலிங் கனகதுர்காவின் நிர்வாக தலைவர் திரு கருணலிங்கம் அவர்கள், திரு ஸ்ரீ ரங்கன் அவர்கள், நடன ஆசிரியர் திருமதி பிரேமினி விமலதாசா அவர்கள், தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு செலின் ஜோர்ஷ் அவர்களும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ்த்துறையின் திருமதி குமாரி நித்யானந்தா திரு செந்தில் அவர்களும் சிறப்பித்திருந்தார்கள்.
வெகுவிரைவில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைவது எம் தமிழ் மக்களிடம் உள்ளது