அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் பென்குவின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அண்டார்டிகாவில் அடெலி, ஜென்டூ என இருவகை பென்குவின்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து அங்கு வெப்பநிலை அதிகரித்ததால், கடல் நீர் உறைந்து காணப்படும் பகுதிகளின் பரப்பளவு சுருங்கியது.
இதனால், குளிர்ச்சியான பகுதிகளில் வசிக்கக் கூடிய அடெலி இன பென்குவின்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
அதே சமயம் வெப்பமான பகுதிகளில் வசிக்க விரும்பும் ஜென்டூ இன பென்குவின்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.