• Thu. Apr 25th, 2024

திரையரங்குகளில் சிற்றுண்டிகளுக்கு தடை விதித்த பிரான்ஸ் அரசாங்கம்!

Jan 1, 2022

பிரான்சில் Omicron தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக சிறிது காலத்திற்கு திரையரங்குகளில் பாப்கார்ன் மற்றும் சிற்றுண்டிகளுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.

பிரான்சில் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டுப்பாடு, அடுத்த மூன்று வாரங்களுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது அனைத்து விதமான உண்ணக்கூடிய மற்றும் பருக்கக்கூடிய உணவுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த நடவடிக்கைகள் திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள் மற்றும் பொது போக்குவரத்துக்கு பொருந்தும்.

தொற்றுநோய்களின் போது வீட்டில் திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களைத் திரும்பக் கவரும் என்று நம்பிய திரையரங்கு உரிமையாளர்கள், இந்த கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவார்கள்.

பிரான்சில் உள்ள திரையரங்குகள் 2021-ல் மீண்டும் திறக்கப்பட்ட எட்டு மாதங்களில் 96 மில்லியன் டிக்கெட்டுகளை விற்றுள்ளன, இது கடந்த ஆண்டை விட 47 சதவீதம் அதிகமாகும்.

ஆனால் டிக்கெட் விற்பனை 2019 உடன் ஒப்பிடும்போது இன்னும் 55 சதவீதம் குறைந்துள்ளதாக திரைப்படம் மற்றும் நகரத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.