• Sat. Mar 23rd, 2024

ஆக்ஸிஜனை அளிக்கும் புதிய துணி கண்டுபிடிப்பு

Nov 19, 2021

ஆக்ஸிஜனை அளிக்கும் புதிய துணி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

திடீரென ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லாத வகையில் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க புதிய பைபர் துணி ஒன்றை அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பைபர் துணியிலிருந்து உடலின் தேவைக்கு ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளலாம் விளையாட்டு வீரர்கள், மேடையில் நடனமாடுபவர்களுக்கு உதவிகரமாக இந்த ஆக்சிஜன் துணி இருக்கும் என்றும் இந்த துணியை அணிந்து கொண்டால் உடலுக்கு நேரடியாக ஆக்சிஜன் செல்லும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது