ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம், பராமரிப்பாளரை கொன்றுவிட்டு, உடனிருந்த மற்றொரு சிங்கத்துடன் தப்பிச் சென்றதால் பீதி ஏற்பட்டது.
மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள பல ஆண்டுளாக வளர்க்கப்பட்டு வரும் 2 சிங்கங்கள் நேற்று திடீரென கூண்டை எப்படியோ திறந்துகொண்டு வெளியேறின.
சிறிது நேரத்தில் சிங்கங்களுக்கு பராமரிப்பாளர் உணவு கொண்டு வந்துள்ளார். அப்போது கூண்டியில் இருந்து வெளியேறிய சிங்கங்களில் பெண் சிங்கம், அந்த பராமரிப்பாளரை கடுமையாக தாக்கியது. இதில் பராமரிப்பாளர் உயிரிழந்தார்.
அதன் பின்னர் இரண்டு சிங்கங்களும் அங்கிருந்து தப்பிச் சென்றன.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். உயிரியல் பூங்கா முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தேடுதல் வேட்டை தொடங்கியது.
நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு இரண்டு சிங்கங்களையும் பாதுகாப்பு படையினர் பிடித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.