• Fri. Jun 2nd, 2023

பெண்களின் கல்வி உரிமைக்காக போராடிய மலாலாவுக்கு திருமணம் ஆனது

Nov 10, 2021

பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் மலாலாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் கல்வி குறித்து தொடர்ந்து பேசி வந்த மலாலா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் மீண்டு வந்த அவர் உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.

அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், 24 வயதான மலாலா, அசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள அவர் திருமண புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.