• Tue. Mar 26th, 2024

பாம்பின் விஷத்திலிருந்து கொரோனாவுக்கு மருந்து

Sep 1, 2021

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு குரங்கின் செல்களில் வளரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஜரரகசு பிட் வைப்பர் என்ற ஒரு வகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் மூலக்கூறு குரங்கின் உடலில் வைரஸ் பரவும் திறனை 75 சதவிகிதம் குறைப்பதாக மூலக்கூறு என்ற விஞ்ஞான பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாவோ பவுலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரபேல் கைடோ (Rafael Guido) கூறுகையில்,

“வைரஸ் வெளியிடும் முக்கிய புரதத்தை பாம்பின் விஷம் கட்டுப்படுத்துவதை எங்களால் ஆய்வின் மூலம் உறுதிபடுத்த முடியும்” என்றார்.

அத்துடன் மூலக்கூறு என்பது (பெப்டைட்)அமினோ அமிலத்தின் குறுகிய சங்கிலியாகும். இதன் மூலம், கொரோனா வைரஸின் (Enzyme) நொதியுடன் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் வைரஸை உற்பத்தி செய்வதில் இதுவே முக்கிய பங்காற்றுகிறதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து ஊர்வன நிபுணர் கியூசெப் பூர்டோ இதுகுறித்து கூறுகையில்,

“பாம்பை பிடித்து வளர்ப்பதன் மூலம் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை உள்ளடக்கிய பெப்டைட்டை ஆய்வகத்தில் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியும்.

உலகத்தை பாதுகாக்குகிறோம் என்ற பெயரில் பிரேசிலில் இருக்கும் ஜரரகசு பாம்புகளை வேட்டையாடச் செல்லும் மக்களை எண்ணி அச்சப்படுகிறோம். பாம்பால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது” என கூறினார்.