• Sun. Dec 8th, 2024

ஹெய்ட்டியில் பெற்றோல் டேங்கர் வெடித்ததில் 50 க்கும் மேற்பட்டோர் பலி

Dec 14, 2021

ஹெய்ட்டியின் இரண்டாவது பெரிய நகரமான கேப் ஹெய்ட்டியனில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லொறி வெடித்ததில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது, மேலும் டஜன் கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படும் நிலையில் மருத்துவ அதிகாரிகள் இரத்த தானம் செய்வதற்கான பொது வேண்டுகோளை விடுத்துள்ளனர்.