• Tue. Jun 6th, 2023

ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் பலி

Mar 18, 2022

கீயவின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

யுக்ரேன் உள்துறை அமைச்சரின் ஆலோசகரான ஆண்டன் ஜெராஷென்கோ பகிர்ந்துள்ள படங்கள், மோசமாகச் சேதமடைந்த கட்டடங்கள், எரிந்த வாகனங்கள் மற்றும் ஒரு பெரிய பள்ளம் ஆகியவற்றுக்கு மத்தியில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடுவதைக் காட்டுகிறது.