• Sat. Mar 23rd, 2024

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை விற்கும் பெற்றோர்கள்

Nov 3, 2021

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது அங்கு தாலிபான்களின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

தாலிபான்களின் கொடுங்கோலாட்சியை தாங்க முடியாமல் பலர் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர் என்பதும் ஏராளமானோர் உள்நாட்டிலேயே வேறு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் பலர் வறுமையில் வாடுவதாகவும் இதன் காரணமாக ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து உலக மனித உரிமை கமிஷன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.