• Thu. Oct 31st, 2024

ஒரு வழியாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மகாராணியார் புகைப்படம்

Nov 18, 2021

மகாராணியார் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ட்விட்டரில் அரசக்குடும்பம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் ஒரு நாள் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மேலும் அவர் வீடு திரும்பிய பிறகு மகாராணியார் கலந்துகொள்வதாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில் கடந்த ஞாயிறுக் கிழமை நடந்த நினைவேந்தல் கூட்டத்திலும் மகாராணியார் பங்கேற்கவில்லை.

இதனால் அவரின் உடல்நிலை குறித்து அனைவருக்கும் சந்தேகமும் அதே நேரத்தில் கவலையும் அளித்தது.

இந்நிலையில் மகாராணியார் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ட்விட்டரில் அரசக்குடும்பம் வெளியிட்டுள்ளது.