• Fri. Dec 8th, 2023

மேடை ஏறும் போது தடுமாறிய இளவரசர் சார்லஸ்

Nov 1, 2021

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றச் சென்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், படிகளில் ஏறும் போது லேசாகத் தடுக்கி விழச் சென்று பிறகு சுதாரித்தார்.

95 வயதாகும் பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல்நலம் சமீபத்தில் பாதிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக அவரது மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ் பருவ நிலை மாற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.