தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.
ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
தலைநகர் கிவ்வில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.