• Sun. Dec 8th, 2024

கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்கின்றது ரஸ்யா- அமெரிக்கா எச்சரிக்கை

Feb 21, 2022

கொல்லப்படவேண்டிய அல்லது வதைமுகாம்களிற்கு அனுப்பப்படவேண்டிய உக்ரைன் பிரஜைகளின் பட்டியலை ரஸ்யா தயாரித்துவருகின்றதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உக்ரைனை கைப்பற்றினால் கொல்லப்படவேண்டிய அல்லது வதைமுகாம்களிற்கு அனுப்பப்படவேண்டிய உக்ரைன் பிரஜைகளின் பட்டியலை ரஸ்யா தயாரித்துவருகின்றதாக எச்சரிக்கி கடிதமொன்றை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலெட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது.

திகதியில்லாத கடிதமொன்றில் அமெரிக்க தூதுவர் இ;ந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட உக்ரைனின் சில பகுதிகளில்ரஸ்யாவின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா ரஸ்யா துஸ்பிரயோகங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலக்குவைக்கப்பட்ட படுகொலைகள்,கடத்தல்கள் -வலிந்து காணாமலாக்கப்படல் தடுத்துவைத்தல் சித்திரவதைகள் போன்றவற்றை முன்னெடுக்க ரஸ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு காரணமாக பாரிய மனிதாபிமான பேரழிவு ஏற்படலாம் என ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு கடும் படைபலத்தை பயன்படுத்தலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் வசிக்கும் ரஸ்ய பெலாரஸ் அதிருப்தியாளர்களை ரஷ்யா இலக்குவைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.