• Sun. Feb 9th, 2025

அழகிய பெண்களை ஆயுதமாக இறக்கும் ரஷ்யா!

Jan 29, 2022

ரஷ்யா உக்ரைன் நாட்டை ஊடுருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், லிப்ஸ்டிக் அணிந்த அழகிய பெண்களை இரகசிய ஆயுதமாக புடின் களமிறக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் 160,000 பெண்கள் இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இராணுவச் சீருடையில் பெண்களுக்கென தனியாக உள்ளாடைகள் கூட கிடையாது, ஆண்களுடைய உள்ளாடைகளைத்தான் அவர்கள் அணியவேண்டும்.

ஆனால், ரஷ்ய இராணுவம் அப்படி அல்ல, ரஷ்ய அதிபர் புடின் தன் இராணுவ வீராங்கனைகள் தங்கள் பெண் தன்மையை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் லிப்ஸ்டிக் அணியலாம், நெயில் பாலீஷ் போட்டுக்கொள்ளலாம். சொல்லப்போனால், ஆண்டுதோறும் இராணுவ வீரங்கனைகளுக்காக அழகிப்போட்டி கூட நடத்தப்படுமாம்.

அந்த அழகிபோட்டியில் வீராங்கனைகள் தங்கள் உடல் அழகை மட்டுமல்ல, போரிடும் திறனையும் வெளிப்படுத்துவார்களாம்.

ஆனால், புடினைப் பொருத்தவரை, அவர் தனது இராணுவ வீராங்கனைகளை நேருக்கு நேர் மோதும் யுத்தங்களில் பயன்படுத்தமாட்டாராம். நாடுகளுக்குள் ஊடுருவது போன்ற விடயங்களில்தான் அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்கிறது சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று.